வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – சைதாப்பேட்டையில் இபிஎஸ் பிரசாரம்

சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமமுக வேட்பாளர் செந்தமிழனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி எல்லாம் சட்டசபையில் வாய்மூடி அமைதியாக இருந்ததால் செல்வாக்கு குறைந்தது.

* திமுகவிற்கு முட்டுக்கொடுத்து செல்வாக்கு குறைந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி குறைக்கப்பட்டது.

* மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் செல்வாக்கை இழந்தது.

* திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.

* தமிழ்நாட்டில் நடக்கும் பல குற்றங்களில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர்.

* போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

* மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை.

* அதிமுக ஆட்சி அமைந்த உடன் முழுமையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* குப்பைக்கு கூட வரி போட்ட அரசு திமுக அரசு.

* வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link