நீச்சல்: சஜன் பிரகாஷ் 'தங்கம்'

துபாய்: துபாய் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் (200 மீ., ‘பட்டர்பிளை’) தங்கம் வென்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில், துபாய் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவு பைனலில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் பங்கேற்றார். இலக்கை ஒரு நிமிடம், 59.61 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த சஜன் பிரகாஷ் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த 2021ல் இலக்கை 1 நிமிடம், 56.38 வினாடியில் கடந்தது இவரது சிறந்த செயல்பாடாக உள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் (2016) வெண்கலம், 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவில் உலக சாதனை (1:48.24) படைத்துள்ள ஜப்பானின் டையா செடோ 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

ஆண்களுக்கான 1500 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில் இந்தியாவின் அத்வைத் பேஜ் வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான 400 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் (4 நிமிடம், 02.94 வினாடி), அத்வைத் (4:09.77) முறையே 7, 9வது இடம் பிடித்தனர். பிரிட்டன் வீரர் ஜேம்ஸ் ஜார்ஜ் குய் (3:49.27) தங்கம் வென்றார்.

Source link