“மறைமுகமா மொக்க பீஸுன்னு சொன்னாங்க” – அஜித் படம் கைவிடப்பட்டது தொடர்பாக விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு பேசுகையில் அஜித் படம் டிராப் ஆனது குறித்து பெயர் குறிப்பிடாமல் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “எனக்கு மிகப்பெரிய ஒரு படம் பண்ண வாய்ப்பு அமைந்தது. அது நிற்கும் போது அடுத்த படத்துக்கு ஒருவரை நம்ப வைப்பது ரொம்ப கஷ்டம். அந்த சமயத்தில் சின்ன பட்ஜெட்டில் படம் பண்ணுங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க. அவங்க மறைமுகமா மொக்க பீஸுன்னு சொல்லாம சொல்வாங்க. அதை முதல் தடவை அனுபவிக்குறோம்னா அது வேற. ஆனா பல தடவை பார்த்திருக்கோம்னா அது பழகிடும். 

நானும் ரௌடி தான் படம் கூட சென்சார் காப்பி முடிந்ததும் யாருமே நல்லாருக்குன்னு சொல்லல. எனக்கு இருக்கும் ஒரே கனெக்‌ஷன் ஆடியன்ஸ் தான். தியேட்டருக்கு வரும் அவங்களை நம்பி வாழுறவன் நான். அந்த நாள் ஏப்ரல் 10. அதுக்காக வெயிட் பன்னிட்டு இருக்கேன். என்னுடைய மொத்த நம்பிக்கையையும் கதை மேல் வைத்திருக்கேன்” என்றார்.  அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக 2022ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து அவர் விளக்கப்பட்டார். அவருக்கு பதில் மகிழ் திருமேனி கமிட்டாகி விடாமுயற்சி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Source link