தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிந்து சூடு பறக்கும் பிரச்சாரங்களும் தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய சி.பி.ஐ. முத்தரசன் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு கொத்தமங்கலம் கடைவீதியில் வாக்கு சேகரித்துப் பேசும் போது, திமுக கூட்டணி மதச்சார்பற்ற கொள்கை கூட்டணி. ஆனால் அதிமுக கூட்டணி என்பது கொள்கையற்ற மதவாத பிரிவினைவாத கொள்ளை கூட்டணி.
திமுக தலைவர் கலைஞரை வீட்டுச்சிறை வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நாங்கள் பல முறை போய் பார்த்திருக்கிறோம். கலைஞர் சிறைப்படவில்லை. முக.ஸ்டாலின் தான் பணிவிடை செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். எடப்பாடிக்கு என்ன தெரியும். எடப்பாடி முதலில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தான் சொன்னார். ஆனால் எடப்பாடி சம்பந்தி கணக்கு வழக்கு பார்த்த ஒரு கோப்பை எடுத்து வைத்துக்கொண்டு பாஜக கணக்கு பார்த்துவிட்டது. அதே போல பாமக அன்புமணி மத்திய சுகாதாரத்துறையில் இருந்த போது அவரிடம் இருந்த செயலாளர் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த விகாரத்தில் சிக்கி சோதனை செய்த போது பவுன்களை. லாரிகளின் ஏற்றினார்கள்
செயலாளர் வீட்லேயே லாரியில் ஏற்றும் அளவிற்கு பவுன் இருக்குன்னா கையெழுத்துப் போட்ட அமைச்சர் அன்புமணி வீட்டில் எத்தனை லாரியில இருக்குமென்று கணக்குப் போட்டு தூக்கிடாங்க. அடுத்து சின்னம் எனக்கு வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த தினகரன். இப்படி வழக்கில் சிக்கியவர்களைச் சேர்த்துப் பயமுறுத்தியே பா.ஜ.க. கூட்டணி வைத்துவிட்டது. எடப்பாடி சிலந்தி வலையில் சிக்கிய ஈ போலச் சிக்கிக்கொண்டு தவிக்கிறார். ஆனால் திமுக கூட்டணி என்பது செய்ததைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் கூட்டணி” என்றார்.
