“உலக அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள்; ஈரானும் இதையே விரும்புகிறது”

வாஷிங்டன் டி.சி.: இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில், “உலக அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள். ஈரானும் இதைத்தான் விரும்புகிறது. அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது. மற்ற அனைவருக்கும்கூட அதே நிலைதான். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதில் அமெரிக்கா உதவும். அங்கு ஏராளமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெறும். பெரும் பொருளாதார ஆதாயத்தை ஈட்ட முடியும்.

ஈரான் தனது மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும். அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, நாங்கள் அனைத்து வகையான விநியோகப் பொருட்களையும் திரட்டிக்கொண்டு அங்கே காத்திருப்போம். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவில் நாம் தற்போது அனுபவித்து வருவதைப் போலவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது ஒரு பொற்காலமாக அமையக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

Source link