“ரூ.250 வைத்து பாண்டிச்சேரி சென்றேன்…” – விக்னேஷ் சிவன் உருக்கம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு பேசுகையில் படம் குறித்து நிறைய பேசியிருந்தார். அப்போது அனிருத் குறித்து பேசுகையில், “நானும் ரௌடி தான் படத்தை பாண்டிச்சேரியில் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அன்றைய தேதியில் பாண்டிச்சேரிக்கு சென்று ஐந்து நாள் தங்குறதுக்கு கூட என்னிடம் காசு இல்லை. அனிருத்திடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றேன். கையில் 250 ரூபாய் இருந்தது. அதை வைத்து போய்விட்டேன். 

பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது, என் பேகில் 50 ஆயிரம் வைத்துள்ளதாக அனிருத் மெசேஜ் அனுப்பினார். அப்போது நான் அழுத கண்ணீர், பஸ்ஸின் கம்பி முழுவதும் என் இருந்தது. அந்த தருணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அனிருத்தின் இசை மட்டும் கிடையாது, ஒரு மனிதராக அவர் எனக்கு கிடைத்த கிஃப்ட். அவருடன் வேலை பார்க்க நிறைய நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கனவாக இருக்கும் போது அந்த வாய்ப்பு ஓவ்வொரு படத்துக்கும் எனக்கு கிடைக்குது” என்றார்.  

Source link