“தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் என் மேல் காண்டோ காண்டு”

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருநெல்வேலியில் இன்று (08.04.2026) தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். உங்கள் விஜய் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். இந்நேரம் திமுக கையில் முழு அதிகாரமும் இருந்திருந்தால் இந்நேரம் ஸ்டாலின் சார் கையில் அந்த முழு அதிகாரமும் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு வரவிடாமல் செய்திருப்பார். ஆனால் இப்போது தான் அவர் ஒரு அதிகாரம் இல்லாத ஒரு முதல்வராக இருக்கிறார். கேர்டேக்கர் கவர்மெண்ட் என்று சொல்வார்கள். 

அப்படி இருக்கிறதால் என்னமோ கொஞ்சம் ஈஸியா வர முடிந்தது என்று நினைக்கிறேன். திமுக கவர்மெண்ட் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு அவதூறுகள் அவைகளையும் தாண்டி இன்னும் சில பேரு இன்னும் நிறைய அவதூறுகள் எல்லாமே பரப்பினார்கள். திமுக கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இந்த கூட்டணியுமே இங்கே இரண்டு பேருமே வெளியில் வேண்டுமானால் தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள்ளே இவர்கள் இரண்டு பேருமே ஒன்றுதான். 

இவர்கள் இரண்டு பேருக்குமே ஒரே நோக்கம் தான் அது என்ன நோக்கம் தெரியுமா?. உங்களுக்காக நல்லது செய்ய உங்களுக்கு உழைக்க உங்களோடு கூடவே நிற்க இந்த விஜய் வந்துவிடக் கூடாது. அதுதான் அவர்களுடைய நோக்கம் ஆகும். எனென்ன்றால் விஜய் வந்ததில் இருந்து அவர்கள் நிறைய இந்த ஊழல் எல்லாம் செய்து கொண்டு இருந்தார்கள் ஒரு லிஸ்ட் போட்டுச் சொன்னேன் அதெல்லாம் அவர்களால் செய்ய முடியாமல் போனது.  எல்லாவற்றிலும் மண் விழுந்துவிட்டது. 

அதனால் என் மேலே செம கோவத்தில் இருக்கிறார்கள். அதே மாதிரி அடுத்து ஆட்சிக்கு வர முடியாத ஒரு சூழ்நிலையை மக்களே நீங்களே ஆல்ரெடி உருவாக்கிவிட்டீர்கள். இந்த கூட்டணி கணக்கு, அந்த கணக்கு, இந்த கணக்கு எதுவுமே எடுபடவில்லை. இந்த அரித்மெட்டிக் கணக்கு மேத்தமேட்டிக்ஸ் கணக்கு எல்லாமே மண்ணுக்குள்ள புதைத்து விட்டீர்கள். அப்புறம் இந்த கொள்ளை அடித்து வைத்திருக்கிற இந்த பணத்தை எல்லாம் வைத்து கல்லாப்பட்டி கூட்டணியென்று ஒன்று சேர்த்து வைத்திருந்தார். அதெல்லாமே இப்போது கலகலத்துப் போய் நிற்கிறது. டாப் தனியாக, பாட்டம் தனியாக, ரீப்பர் தனியாக ஜாயிண்ட் தனியாக நிற்கிறது. 

தனித்தனியாக எல்லாமே அப்படியே ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டார்கள் போல சூழல் இருக்கிறது. அப்படி இருக்கிறது நிலைமை. திமுக கூட்டணியில் இவர்களுக்குதான் இந்த நிலைமையென்று பார்த்தால், பாஜக தலைமையில் மற்றும் பலர் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது அதனால் மக்களே  திமுகவோடு நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல காண்டு. அந்த காண்டுக்கு ஒரு காரணம் என்ன தெரியுமா?. அவர்கள் வீட்டிலேயே அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம்.

tvk-vijay-campaign
கோப்புப்படம்

அடுத்த காண்டு சில பல கோடிகளைக் கொடுத்து நம்ம தமிழ்நாட்டு காங்கிரஸ் பையில போட்டுக்கிட்டார்கள் என்று. ஆனால் உண்மையான காங்கிரஸ் யார் பக்கம் நிற்கிறது. நம் பக்கம் நிற்கிறது.  சிறுபான்மை மக்களுடனான திமுக சாயம் வெளுத்து போச்சு. விஜய் என்னடானா மதச்சார்பற்ற கொள்கையோடு உண்மையான ஒரு முகமாக இருக்கிறானே இந்த சிறுபான்மை மக்கள் வேற விஜய் பக்கம் தானே நிற்கிறார்கள். அப்படி என்று திமுகவுக்கும் பாஜகவுக்கும் என் மேல காண்டோ காண்டு” எனப் பேசினார்.

Source link