திடீரென சர்பிரைஸ் கொடுத்த நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு பேசுகையில் படம் குறித்து நிறைய பேசியிருந்தார். அப்போது நயன்தாரா குறித்து பேசுகையில், “இந்த படத்தில் தயாரிப்பாளர் நயன்தாரா என வருகிறது. நாங்கள் மலேசியாவில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டோம். அங்கு எல்லாமே தயாராக இருந்தது. ஆனால் சில இடங்களில் ஷூட்டிங் நடத்த பனம் செலுத்த வேண்டும். அப்போது திடீரென ஓடிடி மார்கெட் கிராஷ் ஆகிவிட்டதால் பட்ஜெட்டையே திருப்பி சரிபார்க்க வேண்டுமென சொன்னார்கள். நான் நினைத்தபடி படத்தை எடுக்க வேண்டும் என உறுதியாக நின்றேன். ஆனால் படப்பிடிப்பு நடக்காதபடி சூழல் வந்துவிட்டது. அப்போது எதிர்பாராத விதமாக எல்லாமே சரியாகிவிட்டது. பின்பு மலேசியாவிற்கு சென்று ஷூட்டிங் நடத்தினோம். ஆனால் அங்கு சென்ற பின்பு தான் எனக்கு தெரிந்தது பிரச்சனை சரி செய்தது நயன்தாரா என்று. மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக அவர் வாங்கிய அட்வான்ஸை வைத்து அந்த இடங்களுக்கு பணம் செலுத்தப்பட்டது.    

அவங்க இந்த மாதிரி ஆடியோ லாஞ்சுக்கு வர மாட்டாங்க என்பது இருக்கு. ஆனால் அவங்க இரண்டு நாள் முன்னாடி இங்க வந்து எல்லாத்தையும் சரிபார்த்தாங்க. இப்போது எங்க உட்கார்ந்துட்டு இருக்காங்கன்னு தெரில. நடிகை நயன்தாராவை ஆடியோ லாஞ்சுக்கு கூப்பிட்டு வருவது என்னாலையும் முடியாது” என்று பேசிக்கொண்டிருந்தவர் நயன்தாராவை யாராவது மேடைக்கு அழைத்து வாருங்கள் என சொன்னார். ஆனால் நயன்தாரா யாரும் எதிர்பாரா விதமாக மேடைக்கு வந்து சர்பிரைஸ் செய்தார். ஆனால் பேசவில்லை. பின்பு அவர்களது குழந்தைகள் திரையில் தோன்றி விக்னேஷ் சிவனுக்கு அன்பை பொழிந்தார்கள். 

Source link