நிலுவையிலுள்ள ஐ.டி.சி.,யிலிருந்து கடன் அரசிடம் கோரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

புதுடில்லி: அரசிடமிருந்து திரும்ப வர வேண்டிய ஜி.எஸ்.டி., வரி பாக்கியான உள்ளீட்டு வரி பயன் நிலுவையில் இருந்து தங்களுக்கு கடன் அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.


இது குறித்து தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அரசுக்கு கூடுதலாக செலுத்தப்பட்டு, புத் தொழில் நிறுவனங் களுக்கு திரும்ப வர வேண் டிய ஐ.டி.சி., எனும் உள்ளீட்டு வரி பயன் அளவு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். இதில், சி.பி.ஐ.சி., எனப்படும் மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் வருவாய்த் துறையிடம், சில ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையாக தேங்கியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக சிறிய நிறுவனங்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு சேர வேண்டிய தொகை ஐ.டி.சி.,யாக தேக்கமடைந்துள்ளதால், விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவது சிரமமாக உள்ளது.

இந்த நிலுவைத் தொகையில் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெற முடிந்தால், அந்த நிறுவனங்களுக்கு அது பெரும் நிவாரணமாக இருக்கும். இதை வலியுறுத்தி, இந்த மாத இறுதிக்குள் நிதி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டு உ ள்ளோம். இவ்வாறு தெரிவித்து உள்ளன.

Source link