அமெரிக்க பிரீமியம் பைக்குகளின் விலை குறைய வாய்ப்பு

புதுடில்லி: அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அங்கிருந்து இறக்குமதியாகும் 800 முதல் 1,600 சி.சி., திறன் கொண்ட பிரீமியம் மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. இதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 2018ல் இதற்கான வரியை 50 சதவீதமாக குறைத்த இந்தியா, கடந்தாண்டு அதனை 30 சதவீதமாக குறைத்தது.

இந்த சூழலில், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க உயர் வகை பிரீமியம் பைக்குகளுக்கு இந்தியா முழு வரி விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை, இந்தியாவில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில், உயர் ரக பிரீமியம் மோட்டார் சைக்கிள்களுக்கான சந்தை மிகவும் சிறியது; அதிலும் அமெரிக்காவின் பங்கு சிறு துளிதான். எனவே, ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை குறைவால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படாது என்று நிபு ணர்கள் கூறுகின் றனர்.

Source link