உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் பிஸ்டலில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

பிஸ்டல்/ரைபிள் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று ஸ்பெயின் நாட்டின் கிரனடாவில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் இந்தியாவின் கலப்பு அணி தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் உலக சாதனைப் படைத்தது.

இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது. இதில் இளம் வீரரான முகுஷ் நெலவள்ளி 579 புள்ளிகளுடன் 14-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள.

உஜ்வால் மாலிக் 577 புள்ளிகளுடன் 22-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார். சர்வதேச போட்டிகளில் முதன்முறையாக கலந்து கொண்ட பிரமோத் 574 புள்ளிகளுடன் 39-வது இடத்தையே பிடித்தார்.

Source link