ஈரானில் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் தோண்டி எடுக்கப்படும்: டிரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானில் உள்ள அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கட்டிடம் இடிபாமுகளுக்குள் மூழ்கியது.

அணுசக்தி திட்டத்தை கைவிட ஈரான் மறுத்ததாக கூறி, கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்கா- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இரண்டு வாரத்திற்கு தாக்குதலை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இரண்டு வாரங்களில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ஈரானில் புதைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தோண்டி எடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியை ஈரானுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்காது. கடந்த ஜூனில் இருந்து யாரும் எதையும் தொடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது குறித்து ஈரான் எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை.

Source link