TN Election 2026 | திருப்போரூரில் மக்கள் ஆதரவு யாருக்கு?

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் களத்தில் உள்ளன.

இம்முறை நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு அதிகம் உள்ளது என்பதை கண்டறிய ஊடகங்கள் பலவும் கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் பகுதியில் உள்ள மக்கள் மனநிலை அறிய 40க்கும் மேற்பட்டோரிடம் மாலைமலர் சார்பில் ஒரு VOX POPS எடுக்கப்பட்டது.

அதன்படி, ஆளும் கட்சியான திமுகவுக்கு 20 பேரும், தவெகவுக்கு 12 பேரும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு 4 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 3 பேரும், மற்றவர்களுக்கு 2 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மை என்பது மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் மட்டுமே தெரிய வரும்.

Source link