–நமது நிருபர்-திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகாலப் போராட்டத்தின் பலனாக உருவான

–நமது நிருபர்-

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகாலப் போராட்டத்தின் பலனாக உருவான ‘அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம்’, வரும் தேர்தலில் யாருடைய அரசியல் தாகத்தைத் தீர்க்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேரடி பலன்

அத்திக்கடவு-அவிநாசி நீர் செறிவூட்டடும் திட்டத்தின் வாயிலாக கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சூலுார், கவுண்டம்பாளையம்; ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை, கோபி; திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, திருப்பூர் வடக்கு ஆகிய ஏழு சட்டசபைத் தொகுதிகள் நேரடிப் பலன் பெறுகின்றன. இதன் வாயிலாக அ.தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்கலாம் என அக்கட்சித் தலைமை திட்டமிட்டது. அதன்படி, முதல்வராக பழனிசாமி இருந்தபோது, முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து 1,652 கோடி ரூபாயை ஒதுக்கி இத்திட்டத்தை துவக்கிவைத்தார்.

“திட்டத்தைக் கொடுத்தோம்; வாக்குகளை அறுவடை செய்வோம்” என்பதே அப்போது அ.தி.மு.க.வின் முழக்கமாக இருந்தது.

தலைகீழ் நிலைமை

இதன் மூலம் 1,045 குளம் மற்றும் குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50 லட்சம் விவசாயிகளும் நேரடியாகப் பயன் பெறுகின்றனர்.கடந்த 2019 சட்டசபைத் தேர்தலில் இந்த ஏழு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தின் பலனாக 2021 லோக்சபா தேர்தலில் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என அ.தி.மு.க எதிர்பார்த்தது. ஆனால், நிலைமை தலைகீழானது.

அ.தி.மு.க. – பா.ஜ. தனித்தனியாகப் போட்டியிட்ட அந்தத் தேர்தலில், இத்திட்டத்தின் மூலம் பயன் பெறும் தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பாஜக கணிசமாகச் சரித்து, தனது செல்வாக்கை வலுப்படுத்தியது. இந்தச் சூழலில், வரும் 2026 சட்டசபை தேர்தல் யாருக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link