“எவ்வளவு பெரிய அவமானம்” – தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த சேரன்

இயக்குநர் சேரன் இந்த தேர்தலுக்கான தனது ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு தெரிவித்திருந்தார். இதையடுத்து தவெக தலைவர் விஜய்யை கடுமையாக தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். எந்த மக்கள் பிரச்சனைக்கு விஜய் நின்றிருக்கிறார் என்றும் வெறும் கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் மீண்டும் விஜய்யை விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க கொளத்தூர தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு விஜய் போல் இருக்கும் டூப் ஒருவரை அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக அது குறித்து பதிவிட்ட சேரன், “ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல். இந்த பரப்புரை நிலை சரிதானா. இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா. அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு. நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்.

நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே… முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே… சிந்தியுங்கள் மக்களே… நீங்கள் யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரசச்சாரம் செய்கிறார். ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரச்சாரத்தை ரத்து செய்கிறீர்கள். இப்போ சொல்லுங்க மக்களே. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே” எனக் குறிப்பிட்டுள்ளார்.  



Source link