நமது நிருபர்முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.செஞ்சி ராமச்சந்திரன்,

நமது நிருபர்

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.

செஞ்சி ராமச்சந்திரன், திமுகவில் மாவட்ட செயலாளராகவும், எம்எல்ஏ ஆகவும் இருந்தவர். வைகோ கட்சி தொடங்கியபோது, இவரும் சென்று விட்டார்.

நீண்ட காலம் மதிமுகவில் இருந்தவர், எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். அந்த கட்சி, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கேற்றபோது, இணை அமைச்சராகவும் இருந்தார்.காலப்போக்கில், வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2014ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சில காலம், கட்சியில் ஈடுபாடின்றி இருந்த அவர், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Source link