திருப்பூரில் ஆதிக்கம் செலுத்தும் திமுக… அதிகாரத்தை கைப்பற்றுமா?

தமிழ்நாட்டின் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 133 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பெரும் கூட்டணியையும் அமைத்துள்ளது.

மறுபுறம் 66 இடங்களுடன் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவும் பல்வேறு கட்சிகளைக் கொண்டு கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே நடிகர் விஜய்யின் தவெக என்ற கட்சியும் தேர்தல் களத்தில் நுழைந்துள்ளது. இதனால் இத்தேர்தலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மக்களிடையே மாலைமலர் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் பகுதியில் மக்களிடையே பேசியதில் அங்கு திமுகவிற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்திற்கு அதிமுக, தவெகவிற்கு போட்டி நிலவுகிறது.

Source link