‘ஸ்டாலின் கடையில் டீ குடிப்பதால் மக்களுக்கு என்ன நன்மை?’-எடப்பாடி பிரச்சாரம்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திநகரில் அதிமுக வேட்பாளர் சத்யாவை  ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில், ”ஸ்டாலின் அவர்கள் சீர்காழி உள்ள மாமனார் வீட்டுக்கு போனாரு. உண்மையில் அவரது மாமனார் வீடு அங்குதான் உள்ளது. அங்கே போய் நல்லா விருந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே வாக்கிங் போனார். நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்.

காய்கறி மார்க்கெட்டுக்கு போகிறார். மு.க.ஸ்டாலின் செல்வந்தர் அல்லவா டீக்கடையை பார்த்தே இல்லை அல்லவா . அங்கு டீக்கடையில போய் டீ குடிக்கிறார் என்று  பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இதனால் நாட்டு மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? அவர் டீ குடிக்கிறதால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும். அந்த டீ கடைக்காரருக்கு அவர் கொடுத்த டீ, பணம் வேஸ்ட்  இழந்து போனதுதான் மிச்சம்” என்றார்.

Source link