புதுடில்லி: பெண்கள் அணிகளுக்கான டென்னிசின் ‘பில்லி ஜீன் கிங்’ கோப்பை தொடரின் ‘ஆசிய-ஓசியானியா குரூப்-1’ பிரிவு போட்டிகள் நேற்று துவங்கின. இந்தியா, இந்தோனேஷியா, தென் கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து என, 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு-ராபின்’ முறையில் மோதும்.
பட்டியலில் ‘டாப்-2’ இடம் பெறும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறலாம். இந்திய அணி தனது முதல் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி (‘நம்பர்-383’), தாய்லாந்தின் ஆன்சிசா சாந்தாவை (‘நம்பர்-456’) சந்தித்தார்.
துவக்கத்தில் இருந்தே மோசமாக செயல்பட்ட வைஷ்ணவி, முதல் செட்டை 6-1 என மோசமாக இழந்தார். தொடர்ந்து அடுத்த செட்டிலும் 3-6 என ஏமாற்றினார். முடிவில் வைஷ்ணவி, 1-6, 3-6 என தோல்வியடைந்தார். இந்திய அணி 0-1 என பின்தங்கியது.
