பிஷ்கெக்: கஜகஸ்தானில் ஆசிய ‘சீனியர்’ மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான ‘கிரிகோ ரோமன்’ பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்தன. அடுத்து பெண்களுக்கான பிரீஸ்டைல் பிரிவில் போட்டிகள் நடக்கின்றன. 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹன்சிகா, 7-0 என கஜகஸ்தானின் சுகிலாவை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஹன்சிகா, 1-11 என சீனாவின் யுஜுவானிடம் தோல்வியடைந்தார். இவர், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கிர்கிஸ்தானின் அரூகியை எதிர்கொள்கிறார்.
59 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நேஹா, 10-0 என கஜகஸ்தானின் விக்டோரியாவை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் நேஹா, 5-12 என சீனாவின் மெங்யு ஜினிடம் தோற்றார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இவர், மல்கோலியாவின் போலார்டுயாவை சந்திக்கிறார்.
65 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியானின் மான்சி லாதெர், 1-2 என சீனாவின் ஜெலு லியிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் காஜல், 3-5 என கஜகஸ்தானின் குல்மாரலிடம் தோல்வியடைந்தார்.
