புதுடில்லி: டில்லி 'சி.எம்.ஸ்ரீ' பள்ளிகளில் 2026 – 2027ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 13ம் தேதி துவங்குகிறது.

புதுடில்லி: டில்லி ‘சி.எம்.ஸ்ரீ’ பள்ளிகளில் 2026 – 2027ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 13ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து, டில்லி அரசின் கல்வி இயக் குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சி.எம்.ஸ்ரீ பள்ளிகளில், 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13ம் தேதியும், 11ம் வகுப்புக்கு மே 7ம் தேதியும் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மே 25ம் தேதியும் வெளியிடப்படும்.

கடந்த, 2025 – 2026 கல்வி ஆண்டில் டில்லி அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படித்த, டில்லியைச் சேர்ந்த மாணவ – மாணவியர் மட்டுமே சி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்புகளை டில்லி அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

டில்லி அரசின் சி.எம்.ஸ்ரீ பள்ளிகள் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் முழுமையான கற்றல் வழிமுறைகளுடன் கூடிய கல்வியை வழங்குகிறது. பொதுக் கல்வி முறையை வலுப்படுத்தவும், மாணவர்களுக்கான கல்வி மற்றும் இணைச் செயல்பாட்டு வாய்ப்புகளை மேம்படுத்தவும் இந்தப் பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர், டில்லியிலுள்ள 75 அரசுப் பள்ளிகளில் சி.எம்.ஸ்ரீ திட்டத்தை, பிப்ரவரி 17ம் தேதி துவக்கி வைத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link