நாகர்கோவில்: பிரதமர் மோடி ஏப்., 15- அன்று, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நாகர்கோவிலில் 'ரோடு ஷோ'

நாகர்கோவில்: பிரதமர் மோடி ஏப்., 15- அன்று, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நாகர்கோவிலில் ‘ரோடு ஷோ’ செல்ல உள்ளார்.

பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஏப்., 15ல் பிரதமர் நரேந்திர மோடி, நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.

தமிழக முதல்வருக்கு, பா.ஜ.,வை பார்த்தால் மட்டும் தான் பயம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அவர்களுடைய ஊழல்கள் வெளிவரும் என பயப்படுகிறார். அண்ணாமலை பிரசாரம், விரைவில் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link