'ஹெச்.டி.எப்.சி., வங்கியில் முறைகேடு ஏதுமில்லை'

மும்பை: ஹெச்.டி.எப்.சி., வங்கியில் நிர்வாகம் அல்லது நடத்தை தொடர்பான எவ்விதமான பிரச்னையும் கண்டறியப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:

“ஹெச்.டி.எப்.சி., வங்கியின் கூட்டு நடவடிக்கை பதிவேடுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. அதில் எந்த ஒரு பிரச்னையும் இருப்பது கண்டறியப்படவில்லை. ஏற்கனவே, மார்ச் 19ல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பத்திரிகை செய்தி குறிப்பிலும் ஹெச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாகம், நடத்தை ஆகியவற்றில் எவ்வித பிரச்னைகளும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link