கடலுார்: கடலுார் மாவட்டத்தில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று விஜய் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு, போலீஸ் அனுமதியும் பெறப்பட்டது.
அதன்படி, கடலுார், வடலுார், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய இடங்களில், த.வெ.க., தலைவர் விஜய் பேசவிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி பொதுமக்கள், இளைஞர்கள் புதுச்சேரியில் ஓட்டு போடாமல், விஜயை பார்க்க வந்து விடுவர் என்பதால், தன் பிரசாரத்தை விஜய் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
