துண்டறிக்கையால் துயரம்; 'கவனிப்பு' என 'கப்சா'

துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உட்பட, தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடும் பல தொகுதிகளில், அக்கட்சியினர், ‘ஒவ்வொரு வீட்டிலும் தேர்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டறிக்கையை வழங்கி, அதை ‘கவனிப்பு’ செய்ய வரும்போது காண்பிக்க வேண்டும்’ எனக்கூறி வினியோகித்து வருகின்றனர்.


இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகள் அடங்கிய துண்டறிக்கையை வீடுகள்தோறும் கொடுக்கிறோம். ஆனால், மக்கள் அவற்றை தெருவில் வீசி விடுகின்றனர். அவற்றைப் பார்க்கும் கட்சி மேலிட பொறுப்பாளர்கள், எங்களை திட்டுகின்றனர்.

அதனால், ஒவ்வொரு வீட்டிலும் துண்டறிக்கை வழங்கி, ‘வெளியில துாக்கி போட்றாதீங்க; ‘கவனிப்பு’ செய்ய வரும்போது காண்பிக்க வேண்டும்’ எனக்கூறி வழங்குகிறோம். மக்களும், துண்டறிக்கையை துாக்கி வீசாமல் பாதுகாப்பாக வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link