கிரெடிட் கார்டும் 'மகிழ்ச்சி'தான்; என்ன கார்டு தேர்வு செய்யணும்? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 4

இதுவரை கிரெடிட் கார்டு என்றால் ‘கடன்… கடன்… கொஞ்சம் கவனம் வேண்டும்… பார்த்து செலவு செய்ய வேண்டும்’ என்று பார்த்தோம்.

இன்று கிரெடிட் கார்டின் பாசிட்டிவ் பக்கங்களைப் பார்க்கலாம். அவற்றை பற்றி நமக்கு விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.

“கிரெடிட் தொடங்கி எதுவாக இருந்தாலும், அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நல்லதும், கெட்டதும் அமையும்.

முன்னாள் வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்

கிரெடிட் கார்டுகள் மூலம் ஒரு பொருளை வாங்க முடியும்… ஷாப்பிங் செய்ய முடியும் என்பதெல்லாம் உண்மை. அதே அளவிற்கு உண்மை… கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங்குகளில் சலுகைகள், தள்ளுபடிகள் பெறலாம் என்பதும்.

சில பொருள்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் சில தள்ளுபடிகள், சலுகைகள் கிடைக்கும். அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், ஒரு பொருளை வாங்க வேண்டும்… அதற்கு சலுகை கிடைக்க வேண்டும் என்பதற்காக கிரெடிட் கார்டுகள் வாங்குவது தவறு.

ஷாப்பிங்கில் மட்டும் சலுகை இல்லை. சில நேரங்களில், ஏர்போர்ட் லவுன்ச்களில் கூட சலுகை கிடைக்கும்.

எந்தெந்த கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவை?

பொதுவாக Lifetime Free கிரெடிட் கார்டுகள் மற்றும் Secured கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவை.

சரியாக பில் கட்டி வந்தாலே, அனைத்து கிரெடிட் கார்டும் பாதுகாப்பானவைத்தான் மக்களே.

நாளைச் சந்திப்போம்…

Source link