சென்னை: ஏபிவிபி மாணவர்கள் மீதான விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் என மத்திய அமைச்சர்

சென்னை: ஏபிவிபி மாணவர்கள் மீதான விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் கூட்டத்திலல் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துக்களை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு.

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.

Source link