Kerala Election 2026 | நடிகர் மம்மூட்டி தனது மனைவியுடன் வந்து வாக்குகள் பதிவு

அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன்,கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் வி.சிவன்குட்டி மற்றும் நடிகர் மோகன்லால் வாக்களித்தனர்.

இந்நிலையில், நடிகர் மம்மூட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நடிகர் மம்மூட்டியும் அவரது மனைவி சுல்பத் குட்டியும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்காக கொச்சியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்களித்தனர்.

Source link