நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு பேசிய ரஷித் கான், “எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. கடந்த ஏழு, எட்டு மாதங்கள் நல்ல ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல்நிலை ரொம்ப ஒத்துழைக்கிறது.
அதனால் என்னால் சிறப்பாக விளையாடவும் முடிகிறது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்.
பேட்டரை ஏமாற்றி விக்கெட் எடுக்க வேண்டும் என்பதுதான் எப்போதுமே ஆசையாக இருக்கும். அப்படி நான் எடுக்கும் விக்கெட் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுக்கிறது.
கடந்த நான்கு, ஐந்து வருடங்களாகவே குஜராத் டைட்டன்ஸ் அணி இது போன்ற பரபரப்பான ஆட்டங்களையே விளையாடி வருகிறது.

ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தி, நமது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்து, பேட்டர் அடிப்பதற்குக் கடினமான பந்துகளை வீச வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது.
இறுதியில் வெற்றி பெற்ற அணியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பேசியிருக்கிறார்.
