ஈரானுடன் போர் ஒப்பந்தம் குறித்து கெடு விதித்திருந்த அமெரிக்கா கெடு முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் தலையீட்டால் மேலும் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும் போர் நிறுத்தத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைத்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு வருவதற்கும் அமெரிக்கா, ஈரான் இஸ்ரேல் போன்ற நாடுகள் சம்மதித்திருக்கிறது.
இந்நிலையில் இடைக்கால போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஹார்மூஸ் நீரிணையைத் திறப்பதாக கூறிய ஈரான் திடீரென தனது நிலையில் மாறி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹார்மூஸ் வழியாக வரும் எண்ணெய் கப்பல்களிடம் ஈரானுடன் சேர்ந்து கட்டணம் வசூலிப்பது பற்றி அமெரிக்கா யோசனை செய்து பெரும் நிதியை திரட்டுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரானின் நீரிணை திறக்கும் மறுப்பு கவனம் பெற்றுள்ளது.
ஹார்மூஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்ற ஈரானின் அறிவிப்பு ஏற்புடையது அல்ல உடனடியாக திறக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அறிவித்த ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதில் கூறப்பட்டுள்ளது . மேலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்றும் ஏற்புடையதாக இல்லை எனவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்த இருப்பதாக செய்திகள் கூறுகிறது.
ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை குழுவை துணை அதிபர் ஜே டி வான்ஸ் நேரடியாக கவனிப்பார் என்றும அறிவித்துள்ளது.
