அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலை சரிசெய்யவும்… ஈடுகட்டவும் ஈரான் ஒரு வழியைப் பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரையின்படி, இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் நின்றுகொண்டிருக்கும் கப்பல்கள், அதைக் கடக்க ஈரானுக்கு 2 மில்லியன் டாலர்கள் சுங்க வரியாக செலுத்த வேண்டும். அது ஓமனுடன் பிரித்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 2 மில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாயில் சுமார் 18.56 கோடி. ட்ரம்ப்ட்ரம்பின் ‘புது’ பிளான்
இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். வரவேற்றத்தோடு நின்றுவிடமால், நேற்று அந்தச் சுங்க வரியில் பங்கும் கேட்டுள்ளார். “ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க வரி என்பது அற்புதமான விஷயம். ஈரானுடன் இணைந்து அமெரிக்கா இதை ‘Joint Venture’ ஆகக் கூட செய்யலாம். பலரிடம் இருந்து அதைக் காப்பாற்ற இதுவே வழி” என்று அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார் ட்ரம்ப். நினைத்த உடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்க வரி வசூலிக்கவும், அதில் ட்ரம்ப் இணைந்துகொள்ளவும் முடியுமா என்கிற கேள்வி இங்கே எழுகிறது.சர்வதேச சட்டத்தின் படி, ஒரு நாட்டிற்குச் சொந்தமான சொத்துகளின் வழியே பயணம் மேற்கொள்ளப்படும் போதுதான், சுங்க வரி வசூலிக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால், சர்வதேச சட்டத்தின்படி, ஹார்முஸ் ஜலசந்தி ஒரு பொதுச் சொத்து. அதை யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. அந்த வழியாக எந்த நாடு வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். ஹார்முஸ் ஜலசந்திஇன்னொரு பக்கம், ஒருவேளை, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டியிருந்தால், கட்டமைப்பு கட்டணம்… பராமரிப்புக் கட்டணம் என்று எளிதாகக் கட்டணங்களை வசூலித்திருக்க முடியும். ஆனால், சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போல, ஹார்முஸ் ஜலசந்தி மனிதன் கட்டிய கப்பல் பாதை அல்ல. அது இயற்கையாகவே உருவான பாதை. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இப்படி சொந்தம் கொண்டாடும் வழியும் ‘கட்’ ஆகிறது. பிறகு, ஏன் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைச் சொந்தம் கொண்டாடுகிறது?ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லையில் விரிகிறது இந்த ஜலசந்தி. ஆரம்பத்தில் இருந்தே, தங்களது கப்பல்களை நிறுத்துவது… ஆதிக்கம் செலுத்துவது என்று ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது ஈரான். அதனால் தான், ஈரான் போர் தொடங்கியதும், அனைத்து உலக நாடுகளுக்கும் சொந்தமான ஒரு இடத்தை எளிதாக அந்த நாட்டால் ஆக்கிரமிக்க முடிந்தது. மேலும், ஈரானுக்குத் தெரியாமல் எந்தக் கப்பலும் அந்த வழியே சென்றுவிடக் கூடாது என்று அங்கே கடல் கண்ணிவெடிகள்கூட புதைத்து வைக்க முடிந்தது. ஈரான்முக்கியமாக, எல்லையைப் பகிர்கிறது என்கிற காரணத்தால், எந்த நாடும் ஹார்முஸ் ஜலசந்திக்கு கட்டணம் விதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் கடல் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதில் எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்று தான் சுங்க வரி வசூலில் ஓமனையும் சேர்த்துகொண்டிருக்கிறது ஈரான். ஆனால், ஓமன் ஈரானின் இந்த ஐடியாவை மறுத்துவிட்டது. சூழல் இப்படி இருக்க, சுங்க வரி வசூலுக்கு ஈரான் சொல்லும் காரணம் – ‘எங்களுக்கு சுங்க வரி கட்டினால், நாங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்’. இங்கே சுங்க வரியை வசூல் செய்ய ட்ரம்ப்பின் பிளான் என்னவாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் பகிர்கிறார்கள்…ஈரானுடன் இன்னும் முழுமையான போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. அதனால், முழுமையான ஒப்பந்தம் எட்டும் வரையிலும்… அது அமல்படுத்தப்படும் வரையிலும் அமெரிக்காவின் ராணுவ படை, விமானங்கள், கப்பல்கள் அங்கேயே இருக்கும் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப். அதனால், இவர் இதற்கான பராமரிப்புக் கட்டணமாக சுங்க வரியைக் கேட்கலாம். இவர்கள் இஷ்டத்திற்குச் சுங்க வரியைக் கேட்பது இருக்கட்டும்… அதை கட்ட எந்த நாடாவது தயாராக இருக்குமா என்பது தான் இங்கே கேள்வி. இதற்கான பதில், பொதுச் சொத்திற்கு யாரும் சுங்க வரி கட்டத் தயாராக இருக்கமாட்டார்கள் என்பது தான்.
Source link
