43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவானின் சீ யு ஜென் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
