கடந்த வாரம் சென்னை பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்தும் நேர கட்டுப்பாடு விதித்ததாக காரணம் கூறி பிரச்சாரத்தை ரத்து செய்த நிலையில் இந்த முறை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கிய பிறகும் கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்து இருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை மார்க்கமாக கடலூருக்கு செல்வதால் அதில் ரசிகர்கள் சூழும் சிக்கல் இருப்பதால் கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பிறகும் தனது பிரச்சாரத்தை ரத்து விஜய் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும், ரோடு ஷோ நடத்தக்கூடாது என்றும் தெரிவித்து அனுமதி அளித்தது.இதையடுத்து தான் கடலூர் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பிரச்சாரத்தை போல கடலூர் பிரச்சாரமும் ரத்து என்ற செய்தி விஜயைக் காண ஆவலாக இருந்த கடலூர் ரசிகர்கள் ,தொண்டர்கள் மற்றும் கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றம் தருகிறது என்கின்றனர். இருப்பினும் கடலூரில் இன்றைக்கு பதிலாக வரும் சனிக்கிழமை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருப்பதால் விஜய் தினந்தோறும் பிரச்சாரம் செய்வாரா? எனும் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா எனும் கவலையில் தவெக தொண்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
