Badminton Asia Championship | 2வது சுற்றில் ஏமாற்றம் அளித்த பி.வி.சிந்து

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ழீயீ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சீன வீராங்கனை 21-18, 21-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் பிவி சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Source link