“தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்’ என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.
வி.சி.க போட்டியிடும் 8 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். இச்சூழலில் மார்ச் 6-ம் தேதி காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் ஜோதிமணி இளையபெருமாளை ஆதரித்து பிரசாரம், செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு குறித்துப் பேசினார். அப்போது “தொகுதி பங்கீட்டின்போது முதல்வர் ஸ்டாலின் இடத்திலிருந்து நான் யோசித்தேன். தொகுதிகளை வற்புறுத்தி பெறுவதெல்லாம் எனக்கு வராது. சொல்லப்போனால், 8 என்ற எண்ணிக்கையே முன்மொழிந்ததே நான்தான்.
