Rajya Sabha எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, நிதிஷ்குமார் நாளை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக, நிதிஷ்குமார் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை அவர் பதவியேற்பார்.

டெல்லியில் இருந்து வந்த பின் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார். அதன்பின், புதிய அமைச்சரவை அமைப்பது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைகள் நடைபெறும். புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும்.

சமீபத்தில் ஜேடியு கட்சியில் சேர்ந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகின.

Source link