இம்முறை எத்தனை இடங்கள் வெல்வீர்கள் என்ற கேள்விக்கு, “ஆட்சியமைக்கும் அளவுக்கு தேர்தலில் வெல்வோம்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
நிதிஷ் குமாரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்கிறார்களே என்று எதிர்க்கட்சியினர் கூறுவது குறித்த கேள்விக்கு, ”அதுபோன்ற நிலை ஏற்படாது. என் தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைச் செய்வார்கள். மத்திய அரசு உடன் இணக்கமாக இருந்து பல திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம்” என்று முதல்வர் கூறினார்.
கூட்டணிக் கட்சி தொகுதிகளுக்கு ஏன் பிரச்சாரம் செல்லவில்லை என்ற கேள்விக்கு, “கூட்டணிக் கட்சியில் பெரியத் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வந்தார்கள். நான்தான் என் கட்சிக்கு பிரச்சாரத்து செல்ல வேண்டும். நாட்களும் குறைவாக இருந்தது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துதான் நாங்கள் அனைவரும் பிரச்சாரம் செய்தோம்” என்று ரங்கசாமி கூறினார்.
