மனைவியை கொன்று பிணத்தை வீட்டிற்குள் பூட்டி வைத்த கணவன்

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம், பனகனபள்ளி மண்டலத்திலுள்ள நந்தவரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா இவரது மனைவி வெங்கட லட்சுமம்மா.

இந்தநிலையில் வெங்கண்ணா மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை வீட்டில் இருந்த கோடாரியால் கண்மூடித்தனமாக வெட்டிக்கொன்றார்.

பிணத்தை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். நேற்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து கதவுவை உடைத்து திறந்தபோது, வெங்கட லட்சுமம்மா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கண்ணாவை தேடி வருகின்றனர்.

Source link