‘கொரோனாவில் ஸ்டாலினே போய்விடுவார் என பேசினேனா?’ – எடப்பாடி பழனிசாமி விளக்கம் | – Edappadi Palaniswami’s clarification.

தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா காலத்தில் இவரே போயிருப்பார்’ எனப் பேசியிருப்பது சர்ச்சையானது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தி.நகர் சத்யாவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கையில், ‘அதிமுக ஆட்சியில் புயல், மழை, கொரோனா என எல்லாம் வந்தது. நாங்கள் விலைமதிப்பற்ற மக்களின் உயிரை காப்பாற்றினோம். திமுக ஆட்சியில் அப்படி எதாவது வந்ததா? திமுக ஆட்சியில் புயல், மழை, கொரோனா வந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார். கொரோனா வந்திருந்தால் கொரோனாவிலேயே போயிருப்பார்’ என்றார்.

Source link