சலங்பூர் அனுமன் கோவிலில் கோசாலை கட்ட ரூ.10 கோடி நிதி வழங்கிய அனந்த் அம்பானி..!

முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் 31-வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் சலங்பூரில் அமைந்துள்ள அனுமன் கோவிலில் கோசாலை கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது அம்பானி குடும்பம். 

28 ஏக்கர் வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் அதிநவீன கோசாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டிலாவல் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் ரூ.15 கோடி மதிப்பில் இந்த திட்டம் உருவாகிறது. இந்த கோசாலை 500 பசுக்களுக்கு சர்வதேச தரத்திலான வசதிகளை வழங்கும். பிற நன்கொடையாளர்களிடமிருந்து எந்த வகையான பங்களிப்பையும் ஏற்காமல் அம்பானி குடும்பம் தனிப்பட்ட முறையில் இந்த கோசேவையை மேற்கொள்கிறது. அனந்த் அம்பானியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அனுமன் யாகமும் நடைபெற்றது.

அத்துடன் குஜராத் ஜாம்நகரில் ‘வந்தாரா’ என்னும் மிகப்பெரிய வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் ஆனந்த் அம்பானி பிறந்தநாளை முன்னிட்டு யானைகளுக்கு 3 ஆயிரம் கிலோ பழ விருந்து வைத்து அசத்தியுள்ளார். பாபு, புஷ்பா மற்றும் சந்தா ஆகிய 3 யானைகள் தங்களது தும்பிக்கை மூலம் கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது. 

Source link