தமிழக சட்டசபை தேர்தல்: காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும், ரேஷன் அட்டைக்கு தலா 2 ஆயிரம் நிதியுதவி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டார்.தமிழகத்தை முன்னேறறுவோம் என்ற பெயரில் 10 தலைப்பில் 36 பக்கங்களை கொண்ட வாக்குறுதிகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைரேஷன் அட்டைக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்க நடவடிக்கைகாவல்துறையி்ல 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

Source link