புதுடில்லி:டில்லி சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த வளாகம் முழுவதும் நேற்று

புதுடில்லி:டில்லி சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த வளாகம் முழுவதும் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த திங்கள் கிழமை காலை, 8:14 மணிக்கு, டில்லி சட்டசபையுடன் தொடர்புடைய சபாநாயகர் துவங்கி, தலைமைச் செயலகம் வரை அனைத்து தரப்பினருக்கும், சட்டசபை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் இ – மெயில் வந்தது.

அதையடுத்து, அந்த வளாகங்கள் முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில், அது, புரளி என தெரிய வந்தது. இந்நிலையில், அந்த வளாகம் முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. எங்கிருந்து அந்த மிரட்டல் இ – மெயில் வந்தது என்பது தொடர்பாக, தகவல் தொடர்பு வல்லுனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதுபோல, சட்டசபை வளாகம், பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டு, உள்ளே – வெளியே செல்வோர் கண்காணிக்கப்பட்டனர்.

Source link