வர்த்தக எல்பிஜி விநியோகம் 70% அளவுக்கு மீண்டதாக மத்திய அரசு தகவல்

இதைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு எல்பிஜி விநியோகஸ்தரிடமும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நேற்று மட்டும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

எங்களின் ஆன்லைன் முன்பதிவு 98%-ஐ எட்டியுள்ளது. மேலும், ஓடிபி அடிப்படையிலான எல்பிஜி விநியோகம் 92%-ஐ எட்டியுள்ளது.

வர்த்தக எல்பிஜியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அது சுமார் 70% அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மருந்து, உணவு, பாலிமர்கள், விவசாயம், பேக்கேஜிங், பெயிண்ட்ஸ் போன்ற துறைகளுக்கான மொத்த வீட்டு உபயோகம் அல்லாத எல்பிஜி விநியோகமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Source link