குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!

தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இதனை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

  • காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

  • காவல்துறையி்ல 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்

  • பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

  • டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்

  • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை

  • 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

  • தமிழகம் ஆன்மிக சுற்றுலா நகராக மாற்றப்படும்.

  • தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மன நல மருத்துவமனைகள்

  • 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.நாய்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி, கருத்தடை

  • மனநல முதலுதவி செய்ய 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி.

  • அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்றல். இதற்காக ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி

  • விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம்

  • ஆரம்ப சுகாதார மைய வலயைமைப்பு பலப்படுத்தப்படும்

  • பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்

  • இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்

  • முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை.

  • குறைந்த விலையில் வீடுகள், விரைவான நிலப்பட்டா வழங்கப்படும்

    என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன

Source link