குன்னூர் தொகுதியில் திமுக கோட்டையை அசைக்குமா அதிமுக?

நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெளியூர் வேட்பாளர்கள் என்பதும், அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்பதும் பலவீனமாக உள்ளது. இருப்பினும், முதன்முறை வாக்காளர்கள் மற்றும் மாற்று அரசியல் நாடுபவர்களின் வாக்குகளை இவர்கள் கவர வாய்ப்புள்ளது.

திமுக 9 முறை வெற்றி

குன்னூர் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 15 தேர்தல்களில், திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தமாகா(மூ) ஒரு முறையும் வென்றுள்ளன.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 4 தேர்தல்களில், 2016 தவிர மற்ற தேர்தல்களில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் தொகுதியைத் தக்க வைக்க திமுக கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

வாக்காளர்கள் விவரம்:

ஆண் – 83,045

பெண் – 92,768

3-ம் பாலினத்​தவர் – 7

மொத்த வாக்​காளர்கள் – 1,75,820

Source link