விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி: டி.கே.சிவக்குமார்

சென்னை: விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாவது: டி.கே.சிவக்குமார் கூறியதாவது: தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சொன்னாலும், மாநில கட்சிகள் வலிமையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் திமுக விரும்புகின்றன. ஒட்டு மொத்த நாட்டையும் நிலையற்றதாக்க விரும்பவில்லை. நம்மை பிரிக்க வேண்டும் என நினைக்கின்றனர். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

விஜய் முதிர்ச்சியற்ற அரசியல் வாதி. அவருக்கு அரசியல் முதிர்ச்சி என்றால் என்னவென தெரியாது. அவருடன் திரிணமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமே இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். காங்கிரஸ் அவருடன் இல்லை. தமிழகத்தில் திமுக உடன் தான் காங்கிரஸ் நிற்கிறது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திமுக காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Source link