மால்டா: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் ஓட்டுகளை பாஜ அழித்துள்ளது என அம்மாநில

மால்டா: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் ஓட்டுகளை பாஜ அழித்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மால்டா பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: ஓட்டுகளை வாங்க பாஜ பணத்தை பயன்படுத்துகிறது. தேர்தலை கெடுக்க உபி மற்றும் பீஹாரில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறது. அதிகாரிகளை மிரட்டி, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கிறது. பாஜவின் மிகப்பெரிய ஊடுருவல்காரர்கள், பெண்களை மதிக்க மாட்டார்கள். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓட்டுகளை பாஜ அழித்து வருகிறது.

குறிப்பாக திரிணமுல் செல்வாக்கு மிக்க பகுதிகளில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வங்கமொழி பேசும் தொழிலாளர்கள் ஓரங்கட்டபட்டப்படுவதுடன், பாஜ ஆளும் மாநிலங்களில் மிரட்டப்படுகின்றனர். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Source link