அசாம், கேரளம், புதுச்சேரி வாக்குப்பதிவு: மாலை 5 மணி நிலவரம்

அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

126 தொகுதிகளை கொண்ட அசாமில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க கூட்டணியும், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன. இங்கு மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணிக்கும், காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. – நேயம் மக்கள் கழ கம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாம், கேரளம், புதுச்சேரியில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி அசாமில் 17.87 சதவீத வாக்குகளும், கேரளத்தில் 16.23 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும் பதிவாகின.

முற்பகல் 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 37.06 சதவீதம் வாக்குகளும், கேரளாவில் 33.28 சதவீத வாக்குகளும், அசாமில் 38.92 சதவீத வாக்குகளும் பதிவானது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83 சதவீத வாக்குகளும், கேரளாவில் 49.70 சதவீத வாக்குகளும், அசாமில் 59.63 சதவீத வாக்குகளும் பதிவானது.

மதியம் 3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 72.40 சதவீத வாக்குகளும், கேரளாவில் 62.71 சதவீத வாக்குகளும், அசாம் மாநிலத்தில் 75.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 86.92 சதவீத வாக்குகளும், கேரளாவில் 75.01 சதவீத வாக்குகளும், அசாம் மாநிலத்தில் 84.42 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Source link