90 சதவீதத்தைக் கடந்த வாக்குப்பதிவு: வரலாறு படைத்தது புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணிக்கும், காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. – நேயம் மக்கள் கழ கம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும், முற்பகல் 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 37.06 சதவீதம் வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83 சதவீத வாக்குகளும், மதியம் 3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 72.40 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 86.92 சதவீத வாக்குகளும் பதிவாகியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. தற்போது 90 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளது. இது புதுவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாகும்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது புதுவையில் மொத்தம் 83.4 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Source link