புதுச்சேரி தேர்தலில் உச்ச அளவாக 89.13% வாக்குகள் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இதுவரை இல்லாத உச்ச அளவாக 89.13 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டிராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் இருந்தன. அதில் பதற்றமானவை 209, கிரிட்டிக்கல் 5 இருந்தன. வாக்குப் பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதுச்சேரி தேர்தலை கிர்கிஸ்தான், மால்டோவா, மங்கோலியா, பூடான் உட்பட ஆறு வெளிநாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்து பார்வையிட்டனர்.

Source link